மிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருப்பவர் ரெஜினா சான்ட்ரா. என்ன நடந்ததோ... ஏது நடந்ததோ... இல்ல கண்டிப்பா நடந்துச்சோ என்னவோ... மும்பைத் தொழிலதிபர் ஒருவரைத் திடீரென ரெஜினா ரகசியக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இப்போது மீண்டும் அதே தகவல் பரபரப்பாகக் கிளம்பிவிட்டது. ஆனால், ரெஜினாவோ, ""இந்தமாதிரி நியூஸ்களுக்கு பதில் சொல்வதை விட கம்முன்னு இருப்பதே உத்தமம்'' என்கிறார்.

Advertisment

rr

நம்ம தமிழ் சினிமாவில் இருக்கும்இளம் பவர்ஃபுல் ஹீரோவுடன் ஒரே ஒரு படத்தில்தான் இணைந்து நடித்தார் ரெஜினா.

அந்த ஹீரோவோ, கடற்கரை அருகே காஸ்ட்லியான பங்களா ஒன்றை ரெஜினாவிற்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இப்போதும் தமிழ் சினிமாவில் ரெஜினா வின் மனம் கவர்ந்த ஹீரோவும் அவர்தான். ரெஜினா சென்னை வரும்போதெல்லாம் அந்தப் பங்களாவில்தான் இருவரும் ஓய்வெடுக்கிறார்களாம்.

Advertisment

rr

இங்கே இப்படின்னா...

மும்பையிலோ கதை வேறுமாதிரி போகுது. அங்கேயும் பவரில் இருந்தவரின் மகன் ஒருவர் இந்தி சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே அவருக்கு நம்ம தமிழ் சினிமாவில் நடித்த ஹீரோயின் ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது. அந்த ஹீரோவின் நண்பராக இருப்பவர் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் மகன். அந்த கோடீஸ்வரரின் மகனும் ரெஜினாவிடம் நெருங்கிப் பழகி, கோடீஸ்வரர்கள் மும்பையில் வசிக்கும் ஏரியாவில் காஸ்ட்லியான அப்பார்ட்மென்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளாராம்.

ரெஜினா காட்ல கரன்சி மழை பிய்ச்சுக்கிட்டு ஊத்துதாம்!